Header Ads



ஏழையாய் பிறந்தது எனது தவறா, டீச்சர் எனது தவறா... ?


மொஹமட் ஜெமீல் (தெல்தோட்டை)

ஒன்லைனில் நீங்கள்
ஓய்வில்லாமல் 
பயிற்சி தந்து
மாணவர் பலரை
கல்வியில்
மேன்மைப் பெறச் செய்வது கண்டு
மெய் சிலிர்த்துப்
போனேன் டீச்சர்
நான் மெய் சிலிர்த்துப் போனேன்
ஓப்லைனிலே இருக்கும்
எமது வயிறு
ஒரு கவலச் சோற்றுக்கு
ஏங்கும் போது
நாமெங்கே டீச்சர்
ஒன்லைனில் படிப்பது
வட்சப் குரூப்கள்
ஒவ்வொரு வகுப்புக்கும்
ஓப்பன் செய்து
வகை வகையாய்
வினாப் பத்திரம்
வழங்கி வாழ்த்தும்
பாராட்டும் வாங்குவதற்கு
வக்கற்றுப் போனோம் டீச்சர்
நாம் வக்கற்றுப் போனோமே டீச்சர்
டேட்டா நூறு ரூபாய்க்கு
நாம் போட்டு
தோதாக நாம் கல்வி கற்று
பயிலும் சில நிமிடத்துக்கு
ஒரு கிலோ அரிசி வாங்கி
ஒரு குடும்பமே கஞ்சுக் காய்ச்சி
ஒரு நேரத்த ஒப்பேத்திடலாமே என்று
என் அப்பாத்தா சொல்றா டீச்சர்
ஒப்பேத்திடலாம் டீச்சர்
ஒப்பேத்திடலாம் தானே டீச்சர்.
பேசிடவும் கேட்டிடவும்
போன் என்ற பெயரில்
என் அப்பாவிடம் ஏதோ ஒரு
போன் இருக்குது தான் டீச்சர்
அதுல எங்கே டீச்சர்
எனக்கொரு பயிற்சி
வருமா டீச்சர்........
சொல்லுங்க டீச்சர்........ வருமா ?
பாடசாலைத் திறந்ததும் டீச்சர்
பறந்தோடி வந்து
பயிற்சி பல கொடுத்திருக்கும்
பாங்கை நான் விளங்கிக்
கொண்டு வினாவையும் விடையையும்
விறுவிறுப்பாய்
எழுதி தாறேன் டீச்சர்
எனக்கேதும் ஏசிட
வேண்டாம் டீச்சர்.





4 comments:

  1. ஏழையாய் பிறந்தது உன் தப்பில்லை
    தம்பி
    உன் தப்பில்லை தம்பி

    ஓன்லைனில் பயிற்சி கொடுத்து
    ஒப்பேத்திடலாம் என்பது
    காலத்தின் தேவை என
    கல்விக் காரியாலயம் நமக்கு சொல்லுது தம்பி
    நமக்கு சொல்லுது

    கண்ணயர்ந்து தூங்க
    ரூம் இல்லாத பிள்ளைக்கு
    ஸூம் எல்லாம் வெறும் கனவு தான் தம்பி
    மனம் வலிக்குது தம்பி

    டீச்சராக இன்று நாம் இருந்தாலும்
    டீன் ஏஐகளில் நாமும் பல வைரஸ்கள் கண்டோம்
    என்பதுகளிளும் தொன்னூறுகளிளும்
    ஏழெட்டு மாதங்கள்
    ஏழைக்கும் பணக்காரனுக்கும் வீட்டில் வெளிச்சம் இருக்கவில்லை
    ஏட்டில் எழுத்தும் இருக்கவில்லை.
    பாடசாலையும் இல்லை
    பயிற்சியும் இல்லை
    நாங்களும் கல்வி கற்றோம்
    நாட்டினில் தலை நிமிர்ந்து வாழ்கின்றோம்.
    காலம் கடந்து போகும் உன்
    கனவு நனவாகும் தம்பி

    பாடசாலை திறந்ததும்
    ஓடோடி வந்து உன் தாகம்
    தீர்ப்போம் தம்பி.
    பாராட்டுக்கள் பல பெற்று
    பாரினை நீ வெல்ல
    பாடு படுவோம் நாம்.

    ஒன்லைன் இல்லை யென நீ
    ஒப்ஆகி விடாதே தம்பி
    சக்கரை போல் இனிக்கும் கல்வியை
    அக்கறையுடன் படி தம்பி
    அயராத உழைப்பே உன்
    அறிவுப் பசிக்கு தீனி
    டெக்னாலஜி வேண்டாம் உன் சைகொலஜி போதும் தம்பி.

    திருமதி நுஸ்ரத்.
    (ஆசிரியை)

    ReplyDelete
  2. Dear Nusrath teacher,
    Such a motivational poem of you will be inspired to the students who are poor and have technological devices in the home.

    Have many ways to learn for learners

    ReplyDelete

Powered by Blogger.