Header Ads



ஹலீமின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

இம்முறை நோன்புப் பெருநாளை  கடந்த வருடங்களைப் போல் அல்லாது வீடுகளில் இருந்து கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.  

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு முன்னாள் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.  
அவர் தொடர்ந்து பேசுகையில் 

நாம் பிற மதத்தவர்கள் தமது பண்டிகைகளை எவ்வாறு வீடுகளில் இருந்து கொண்டாடினார்களோ நாமும் இப்பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து எமது  நாட்டை மீளவும் கட்டி எழுப்புவதற்காக  நோன்பு காலத்தில் வீடுகளில் இருந்து நோன்பு, தராவிஹ் தொழுகை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதைப் போன்று  பெருநாட்களிலும் நடந்து கொள்ளவது மிக அவசியமாகும். இந்தக் கால கட்டத்தில் சுகாதார நடைமுறைப் பேணி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இந்த இனிய நாளில்  ஆபத்தான தொற்றில் இருந்து இந்நாட்டை மீளப் கட்டி எழுப்புவதற்காக சுகாதார அறிவுறுத்தல்களைப்; பின் பற்றி ஒரு முன்மாதரிமிக்க சமூகமாக மிளிர்வதற்கு நாம் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

No comments

Powered by Blogger.