Header Ads



ஜம்இய்யதுல் உலமா கல்குடா, கிளை விடுத்துள்ள அறிக்கை

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

சகோதர சமூகங்களைப் போலவே நாமும் விமர்சையான பெருநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை – கல்குடாக்கிளை இன்று 10.05.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புனித ரமழான் மாதத்தின் எஞ்சியிருக்கும் நாட்களை வீடுகளிலிருந்தே வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுடன், தேவையுடையோருக்கு அதிகமதிகம் உதவுங்கள்.

எந்தத் தேவைகளுக்கும் கூட்டம் சேர்வதை தவிர்த்து, சமூக இடைவெளியைப்பேணல், வெளியில் செல்லும் போது முகக்கவசங்கள் அணிதல், வெளியில் சென்று வந்தால் கைகளைக்கழுவிக் கொள்ளல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடப்பதுடன், எக்காரணம் கொண்டும் உள்ளூர், வெளியூர் புடைவைக்கடைகளுக்கோ ஏனைய வியாபார நிலையங்களுக்கோ சிறுவர்களை அழைத்துக் கொண்டு பெண்கள் செல்வதைக் கட்டாயம் தவிர்ந்து கொள்வதுடன், இது விடயத்தில் ஆண்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், முஸ்லிம் இளைஞர்கள் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்வதுடன், பெருநாள் தொழுகை மற்றும் நிகழ்வுகளை வீட்டோடு மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உரிய சுகாதார ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஊரைத் தனிமைப்படுத்தலிலிருந்து பாதுகாப்பதுடன், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.