Header Ads



தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய, பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம்


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்படும் மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த பொலிஸ் அதிகாரி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் அதிகாரி, கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை மாத்தறைக்கு அழைத்து வந்து, கெக்கனதுர - கலல்ல என்ற பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்து அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியும் பெண்ணும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.