Header Ads



இலங்கையில் கொரோனாவின் தீவிர தன்மை குறைகிறது - பேராசிரியர் சன்ன ஜயசுமன

இலங்கையில் கொரோனா வைரஸின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

வைரஸ் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு செல்லும் போது அதன் தீவிரம் குறைகிறது. இந்த நிலைமையை உலகம் முழுவதும் எம்மால் காண முடிகின்றது.

அண்மைய நாட்களாக நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில் கண்டறியப்பட்டவர்களின் அறிகுறிகள் மிகக் குறைவாக காணப்பட்டது. சிலருக்கு தொண்டையில் சிறிய வலி மாத்திரமே காணப்பட்டுள்ளது.

சிலருக்கு நோய் உண்டா இல்லையா என்று கூட தெரியவில்லை. நோயின் தீவிரத்தன்மை படிப்படியாக குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும். எனவே அறிகுறிகளும் நோயும் படிப்படியாகக் குறையும்.

இந்த போக்கு அடுத்த மூன்று மாதங்களில் நாட்டை மீட்டு வழமைக்கு திரும்ப உதவும் என ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தேர்தலின் தீவிரத்தன்மை அ திகரிக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.