Header Ads



இஸ்லாத்தின் பெயரால் யாரெல்லாம் தவறான, வழிகாட்டுதலில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு இறைவன் நேர்வழி காட்டுவானாக

- Aashiq Ahamed -

கறுப்பினத்தவரே மேலானவர்கள், வெள்ளையர்கள் எல்லாம் பேய்கள், இஸ்லாம் கறுப்பினத்தவருக்கான மார்க்கம் என்று பனிரெண்டு ஆண்டுகள் சொல்லிக்கொண்டிருந்தவர் மால்கம் எக்ஸ். இது தான் இஸ்லாம் என்று உணர்ந்துக்கொண்டு தூய இஸ்லாமின்பால் வந்ததில் இருந்து அவர் வாழ்ந்தது பத்து மாதங்கள் மட்டுமே. நவீன உலகில் இஸ்லாமை நோக்கி லட்சக்கணக்கானோரை வர வைத்தவர்களில் முதன்மையான இடம் மால்கம் எக்ஸ்சிற்கு உண்டு. இதற்கு அவருக்கு தேவைப்பட்டது பத்து மாதங்கள் மட்டுமே.

இதுக்குறித்து, தான் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கார்டன் பார்க்ஸ் என்பவருக்கு கொடுத்த பேட்டியில் பின்வருவதை குறிப்பிடுகிறார் மால்கம் எக்ஸ் .

"பிரதர் உங்களுக்கு நினைவிருக்கின்றதா?

அன்று, வெள்ளையின கல்லூரி பெண் ஒருத்தி உணவகத்திற்கு வந்தாள். கருப்பின முஸ்லிம்களுக்கு உதவ முயற்சித்தாள். ஒரு வெள்ளையின பெண் கருப்பினத்தவருக்கு உதவ முடியுமா? வாய்ப்பே இல்லை என்று அவளை தடுத்தேன். அவள் அழுதுக்கொண்டே உணவகத்தை விட்டு வெளியேறினாள்.

இன்று அதனை நினைத்து வருந்துகின்றேன். ஆப்பிரிக்க கண்டத்தின் பல இடங்களில் வெள்ளையின மக்கள் கருப்பினத்தவருக்கு உதவுகின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகள் பல தவறான எண்ணங்களை கொல்கின்றன.

ஒரு கருப்பின முஸ்லிமாக நான் பல தவறுகளை செய்திருக்கின்றேன். அதற்கெல்லாம் தற்போது வருந்துகின்றேன். அன்றிருந்த அனைத்து கருப்பின முஸ்லிம்களை போல, நானும் (வெள்ளையர்கள் விசயத்தில்) கொடூரமாக நடந்துக்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட திசை காட்டப்பட்டு, அதனை நோக்கி பயணிக்குமாறு மயக்கப்பட்டேன்.

Well, ஒரு மனிதன் முட்டாளாக இருப்பானேயானால் அதற்குரிய பரிசை அவன் பெற்றே ஆக வேண்டும். இதனை உணர்ந்துக்கொள்ள எனக்கு பனிரெண்டு வருடங்கள் ஆனது.

அவை கெட்ட காட்சிகள் பிரதர். அந்நாட்களின் துயரங்களும் முட்டாள்தனங்களும் - இன்று அவற்றிலிருந்து விலகியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்"

இஸ்லாத்தின் பெயரால் யாரெல்லாம் தவறான வழிகாட்டுதலில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு இறைவன் நேர்வழி காட்டுவானாக...

படம்: குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலியுடன் மால்கம் எக்ஸ்.

No comments

Powered by Blogger.