Header Ads



மாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...!


- நவமணி -

மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு தெரிவித்தார். 

எனது குடும்பத்தினர் வருடா வருடம் இந்த அன்பளிப்புகளை ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். 

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் தனது சகோதரர் கடந்த சில நாட்களாக பலரைத் தனித்தனியாக சந்தித்து உதவிகளை வழங்கி வந்தார். 

வருடாந்தம் இந்த இடத்தில் இந்த உதவி வழங்குவதன் காரணமாக அநேகர்  வந்து உதவிகளைத் தருமாறு முன் கதவுக்கு வெளியே இருந்து கோரிக்கை விடுத்தனர். 

வியாழன் காலை எங்கள் சகோதரர் அங்கு சென்றிருந்த போது கூடி இருந்திருக்கிறார்கள். மற்றவருக்கு உதவுவதில் பெரும் அக்கறை கொண்ட எனது சகோதரர், ஒரு சிறிய தொகையினரை உள்ளே எடுத்து பணத்தை வழங்கி இருக்கிறார். 

அதன் பிறகு கேட் மூடப்பட்டிருக்கிறது. கேட் மூடப்பட்டிருந்த வேளையில் உள்ளே வந்தவர்கள் பலவந்தமாக  கேட் ஐ உடைத்துக் கொண்டு உள்ளே வந்ததன் காரணமாகத்தான் இந்த நெரிசல் ஏற்பட்டு உள்ளே இருந்தவர்களும் வெளியே இருந்தவர்களும் அதில் சிக்குண்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கின்றது. 

துரதிஸ்டவசமான நிகழ்வாகத்தான் இந்த நிகழ்வை எங்களுடைய குடும்பத்தினர் பார்க்கின்றனர். உண்மையில் வெளியே வந்தவர்கள் பொறுமை காத்திருந்தால் இப்படி ஒரு கலவரம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

4 comments:

  1. அதிக நேரங்களில் ஒழுங்குள்ளவா்களிடம் பணமிருப்பதில்லை மாறாக பணமுள்ளவர்களிடம் ஒழுங்கிருப்பதில்லை. பணம் உழைப்பதற்கு ஒழுக்கக்குறைவு ஒரு தகைமையாக அமையுமோ?

    ReplyDelete
  2. கொழும்பு முஸ்லிம்கள் கால காலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வருபவர்கள் .அப்படி இருந்தும் இந்த மக்களின் வறுமையை ஒழிப்பதட்கும் ,கல்வியை முன்னேற்றுவதட்கும் ஐக்கிய தேசிய கட்சி எவ்வித வேலைத்திட்டங்களையும் மேட்கொள்ளவில்லை

    ReplyDelete
  3. Prophet Mohamed PBUH said, “No Muslim is afflicted by a harm, be it the pricking of a thorn or something more (painful than that), but Allah thereby causes his sins to fall away just as a tree sheds its leaves”. (Bukhari and Muslim)

    ReplyDelete
  4. This family should have a consulted area police to arrange an queue system or distribute house to house due to current situation. Nobody expected this type of unfortunate incident but there is no patient among some people.

    ReplyDelete

Powered by Blogger.