Header Ads



நோன்பு திறப்பதற்காக மஹ்ரிப், பாங்குக்கு காத்திருக்கும் ஆதித்தியராஜ்


கேரளா பத்தனாபுரம் அம்பலமுக்கு கணியம்சிறை வீட்டில் விக்கிரமண் ஆஷா தம்பதி மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் ஆதித்யராஜ்.

சக முஸ்லீம் நண்பர்கள் நோன்பு இருப்பதை பார்த்து தனக்கும் நோன்பு பிடிக்க ஆர்வமாக இருப்பதாக பெற்றோரிடம் கூற அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். 

பெற்றோர் அனுமதியுடன் ரமலான் முதல் இரண்டு நாட்கள் முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து நோன்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்த ஆதித்யராஜ், கடந்த 22 நாட்களாக தனது வீட்டிலேயே நோன்பு இருந்து வருகிறார்.. 

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து மகனுக்கு தாய் ஆஷா ஸஹர் உணவு சூடாக சமைத்து வழங்க, மாலை வேளையில் மகன் நோன்பு திறக்க பழங்கள் பலகாரங்கள் தினமும் வாங்கி வந்து மகிழ்ச்சியுடன் பரிமாறுகிறார் தந்தை விக்ரமன்... 

வீட்டு வளாகத்தில் உள்ள காய்கறி தோட்டத்தில் பகல் பொழுதில் நேரம் போக்கும் ஆதித்யராஜ், மாலை வேளையில் குளித்து சுத்தமாகி அருகில் உள்ள மசூதியிலிருந்து ஒலிக்கும் மக்ரிப் பாங்கோசைக்காக வீட்டு முன்பு காத்திருக்கிறார்... 

Colachel Azheem

1 comment:

  1. சந்தோசமாக உள்ளது. யா அல்லாஹ் இந்த சிறுவனுக்கும் அவனது பெற்றோருக்கும் நேர்வழியை கிடைக்கச் செய்!

    ReplyDelete

Powered by Blogger.