Header Ads



உங்களது தொலைபேசி அழைப்பு வராவிட்டால், அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கும் - ரெஹான் விஜேவிக்ரம

உங்களது தொலைபேசி அழைப்பு வராவிட்டால் அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கும் அலிஸாஹிர் மௌலானாவின் டுவிட்டர் பதிவுக்கு, வெலிகம நகரசபைத் தவிசாளர் ரெஹான் விஜேவிக்ரம நன்றி தெரிவிக்கும் பின்னூட்டம்.

வெலிகம பகுதியில் ''அப்துல் காதர் ஷரீபத்துன்னிசா'' என்னும் 54 வயது பெண்ணின் ஜனாஸா அடக்கம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முறைப்படி அடக்கம் செய்வதற்கு முன்னின்று உதவிய வெலிகம நகரசபை தவிசாளர் ரெஹான் விஜேவிக்ரம அவர்களுக்கு நன்றி தெரிவித்து அலி சாஹிர் மௌலானா டுவிட்டர் பதிவினை இட்டிருந்தார்.

அவரது அந்தப் பதிவுக்கு ரெஹான் விஜேவிக்ரம தனது பின்னூட்டங்களில் ,

''அலி ஸாஹிர் மௌலானா அவர்களே ...! குறித்த விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காக ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன், எனது பகுதியில் ஒரு சிலர் என்னிடமிருந்து மறைத்த விடயத்தினை, மட்டக்களப்பினைச் சேர்ந்த தாங்கள் அறியத் தந்தீர்கள், உங்களது தொலைபேசி அழைப்பு மட்டும் எனக்கு வராமல் விட்டிருந்தால் அந்த உடல் தகனம் செய்யப்பட்டிருக்கும்...!!!''

என்றும்,

''அலிசாஹிர் மௌலானா அவர்களே...! இந்த விடயத்தில் ஒரு தூதராக மட்டுமில்லாமல் உங்கள் சமூகத்துக்கான ஒரு செயல் வீரனாகவும் செயற்பட்டிருக்கிறீர்கள், சரியான நேரத்தில் நீங்கள் எனக்கு தகவல் தந்ததனால் விருப்புடனும், வேகமாகவும் என்னால் செயற்பட்டு, நடக்கவிருந்த துயரமான சம்பவத்தினை தடுக்க முடிந்தது. இல்லையென்றால் குறித்த துயர சம்பவத்துக்கு நானும் பொறுப்பாளியாகி இருப்பேன். மீண்டும் உங்களுக்கு எனது நன்றிகள் ...!!!''

என வெலிகம நகர சபை தவிசாளர் ரெஹான் விஜேவிக்ரம அலி ஸாஹிர் மௌலானா அவர்களது டுவிட்டர் தளத்திற்கு தனது பதிலாக மேற்படி குறிப்பிட்டிருக்கிறார்.



5 comments:

  1. Respectable Mr Rahean D Vijerathna, I would like convey my thanks to you for necessary action you have taken. Entire Muslim community thankful for your great attitude towards the difficult situation. Thanks again.

    ReplyDelete
  2. He is roban jayawickrama. Mondek jayawickrama grandson.

    ReplyDelete
  3. He is roban jayawickrama. Mondek jayawickrama grandson.

    ReplyDelete
  4. வரும் தேர்தல்களில் இவர் போன்றவர்கள் முஸ்லிம் வாக்குகளால் பலப்படுத்தப்பட்ட வேண்டும்

    ReplyDelete
  5. Thanks Mr. Rehan and Mr. Ali Zahir for respecting human rights.

    ReplyDelete

Powered by Blogger.