Header Ads



கொழும்பில் மீண்டும், வலுவிழக்கும் காற்றின் தரம்

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டபோது கணிசமாக உயர்வடைந்த கொழும்பில் காற்றின் தரக் குறியீடு, ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தியதன் மூலம் மீண்டும் குறைவடைந்துள்ளது.

வீதிகளில் வாகன போக்குவரத்து இல்லாமையினாலும், தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாலும் காற்றின் தரம் உயர்வடைந்த நிலையில் பதிவகியிருந்தாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது ஊரடங்கு தளர்த்தல் போன்ற காரணத்தினால் கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் காற்றின் தரம் குறைவடைந்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் காற்றின் மாசுபாடானது 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கொழும்பில் காற்றின் தரத்தில் ஒரு மைக்ரோகிராம் தூசி பதிவுசெய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்த எண்ணிக்கை 18-20 மைக்ரோ கிராம்களுக்கு இடையில் அதிகரித்துள்ளது.

கொரோனா காரணமாக உலகளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பூட்டல் நடவடிக்கைகளினால் உலகளாவிய ரீதியில் காற்றின் தரம் உயர்வடைந்த நிலையில் கடந்த காலங்களில் காணப்பட்டது.

எனினும் மீண்டும் பூட்டல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளமையினால் காற்றின் தரம் மீண்டும் குறைவடைந்து செல்வதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

No comments

Powered by Blogger.