Header Ads



உயர் நீதிமன்றத்தில் ஞானசாரர், வழக்கு தாக்கல் செய்தார்

“எமது மக்கள் சக்தி கட்சி” குருணாகல் மாவட்டத்திற்காக தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்க, அந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சட்டத்தரணி நளின் அபேசேகர, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எமது மக்கள் சக்தி கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவிற்குள் சத்தியக் கடிதம் இருக்கின்றது என்ற குறைப்பாடு காரணமாக வேட்புமனுவை தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்திற்கு அமைய இப்படியான காரணத்தை அடிப்படையாக கொண்டு வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு இல்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. குருநாகலில் போட்டியிடுவதற்காகவே காவிகள் ஒன்று சேர்ந்து அங்கு இனவாதத்தை உச்சத்தில் பராமரித்து வந்தனர். இறைவன் சதிகாரர்களை விஞ்சிய சதிகாரன் என்பதனை பதிவு செய்துள்ளான்.

    ReplyDelete

Powered by Blogger.