Header Ads



சீனர்களை உலகமெங்கும் விமானங்களில் அனுப்பி, கொரோனாவை பரப்பியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெய்ஜிங் விமான பயணிகளை உலகமெங்கும் அனுப்பி கொரோனாவினை பரப்பியதாக சீனா மீது மற்றுமொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் இதை கூறியுள்ளார்.

வுகான் மாகாணத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியது. கடந்த நவம்பர் மாதத்தில் தாக்கம் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது என்றும் வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பீட்டர் நவரோ ஏபிசியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் பின்னால் இருக்கும் சீனர்கள், இரண்டு மாதங்களாக இந்த வைரஸினை மறைத்து வைத்து, பின்னர் உலகெங்கிலும் விமானங்களில் ஆயிரக்கணக்கான சீனர்களை உலகம் முழுக்க அனுப்பினர்.

இதற்கிடையில் ஐரோப்பாவில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்ததால் தான் நியூயோர்க் பகுதியில் கொரோனாவின் தாக்கம், அதிகரிக்க தொடங்கியதாக கூறியுள்ளனர்.

எனினும் பீட்டர் நவரோவும் ட்ரம்பை போலவே, சீனா நினைத்திருந்தால், அதனை வுகான் மாகாணத்துடனேயே வைத்திருந்திருக்க முடியும்.

ஆனால் அது தற்போது ஒரு தொற்று நோயாக மாறியுள்ளது. அதற்கு காரணம் சீனா தான் என குற்றம் சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.