Header Ads



சம்பிக்கவின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கது

(இராஐதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவரவர் நிலைப்பாட்டை குறிப்பிடும் முக்கிய பேச்சுவார்த்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.

இந்த முக்கிய கூட்டத்தில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாகவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சியினர் கலந்துக் கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கம் கிடையாது. என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள்

No comments

Powered by Blogger.