Header Ads



ஆபத்து ஏற்படும் போது தாய்நாடே, முதலில் நினைவுக்கு வரும் - பாதுகாப்பு செயலாளர்

நாட்டின் அனைத்து பிரஜைகளையும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தாலும் நாட்டு மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளையாமல் அதனை செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை இலத்திரனியல் ஒளி, ஒலிப்பரப்பாளர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த நாட்டில் எந்த தராதரத்தில் இருந்தாலும் ஆபத்து ஏற்படும் போது தாய் நாடே முதலில் நினைவுக்கு வரும்.

இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்பில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை வெளிநாடுகளில் காத்திருப்பதாகவும் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. 'நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந் நிலத்திற்குள் நுழைய வேண்டாம்'.

    'ஓர் மரணம் சம்பவித்தால்
     ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது, கபன் (ஆடை) இடுவது, தொழுவிப்பது, அடக்கம் செய்வது ஆகியவை கடமையாகும்.  இதில் தவறு இழைப்பது அவ்வூரார் மீதே பாவமாகிறது.'

    இவை இரண்டுமே இஸ்லாமியப் போதனைகளாகும்.  இஸ்லாம் இறைவனது உலகில் நடைமுறைச் சாத்தியமான மார்க்கமுமாகும்.

    "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,"
    (அல்குர்ஆன் : 2:208)

    ReplyDelete

Powered by Blogger.