May 10, 2020

சட்டத்தரணி சுமந்திரனுக்கு முன்னாள் அமைச்சர் ஹலீம் ஆசிர்வாதம்

உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடம்பை தகனம் செய்யும் விடயம் தொடர்பில் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் முஸ்லிம் சமூகம் சார்பாக எந்தவொரு கட்டுப்பணமுமின்றி உயர் நீதி மன்றத்தில் பேசுவதற்காக முன்வந்துள்ளதைப் போன்று பெரும்பான்மையின சகோதரர் அரசியல் தலைவர்களும் வைத்திய அதிகாரிகளும் சட்டத்தரணிகளும் இந்த விடயம் தொடர்பில் மனமுவந்து அக்கறை காட்ட வேண்டும் என்று முன்னாள் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்,

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் 19 கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடம்பை தகனம் செய்யும் விடயம் தொடர்பில் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகுவதற்காக எந்தவொரு கட்டணமுமின்றி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் முன்வந்துள்ளமையினையிட்டு முஸ்லிம் சமூகம்   சார்பாக அந்நாருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு  பெரும்பான்மையின  அரசியல் தலைவர்களும் வைத்திய அதிகாரிகளும் சட்டத்தரணிகளும் இந்த விடயம் தொடர்பில் மனமுவந்து அக்கறை காட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களுடைய உடலை எரிப்பது என்பது முஸ்லிம்களுடைய மார்க்க சட்ட திட்டங்களுக்கு முரண்பாடானதாகும்.  இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம்  கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்த உடம்பை அடக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடம்பையும் அடக்குவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி முஸ்லிம் சிவில் சமூகம் அரசியல் தலைவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும் கூட அது இதுவரையிலும் சாத்தியப்பாடாக அமையவில்லை.

இந்நிலையில் அரசாங்கத்தினுடைய மன இறுக்கமான போக்கினால் மனம் நொந்துபோயுள்ள முஸ்லிம் சமூகம் நீதி மன்றத்தை நாட வேண்டியிருந்தது. இதற்காக பெருந்தொகைப் பணம் வேண்டும். யாரிடம் அறவிடுவது. பொருளாதாரம் நெருக்கடியான கால கட்டம். இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற செய்திகள் வெளிப்படையாக இல்லா விட்டாலும் சமூக வலைத்தளங்களில் உலா வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த  இக்கெட்டான கட்டத்தில்  பாரிய  கவலையுடன்  ; மனம் நோந்து போய்  இருந்த  முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு ஆறுதல் அளிக்கும் வகையில் பிரபல்யமான சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் எந்தவொரு கட்டுப்பணமுமின்றி கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடம்பை தகனம் செய்யும் விடயம் தொடர்பில் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகுவதற்காக முன்வந்துள்ளமை என்கின்ற செய்தி மனதிற்கு ஆறுதலை தருகின்றது.  நான் மிக்க பெருமிதம் அடைவதோடு மட்டுமல்ல எமது முஸ்லிம் சமூகத்தின் சார்பாக அவருக்கு என்னுடைய   மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் முடக்கப்பட்டு நாடு இன்று  மீளத் திறக்கப்படுகிறது.  இது தொடர்பில்  குறித்த உயர் மட்ட வைத்திய சங்கங்கள் மத்தியி;ல் அதிகளவு தயக்கம் காணப்படுவதை அதானிக்க முடிகிறது. அதேவேளை தேர்தலை மையப்படுத்தி நாடு மீளத் திறக்கப்படுகிறது என்ற யூகங்களும்  மக்கள் மத்தியில் இருந்து வருவதை அதானிக்க முடிகிறது.

இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்hலும் கூட பின்னர் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது பற்றி எதிர்வு கூற முடியாது. எனவே பொது மக்களாகிய நாம் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை சரியான முறையில் பேணி நடக்க வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பாக   சமூக இடைவெளியைக் கருத்திற் கொண்டு கண்டிப்பாக பின்பற்றி நடப்பது அவசியமாகும்.

எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கு நீதி நியாத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் முன்னெடுத்த பயணம் வெற்றியளிக்க வேண்டும் என தான் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

5 கருத்துரைகள்:

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது சம்பந்தமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் எந்த விதமான கட்டணங்களும்
இல்லாமல் வாதிடுவதற்கு முன்வந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் ஏகோபித்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

My heartfelt gratitude to honourable Sumendran on behalf of the Muslim community for coming forward to appear in the court for our rights.

சுமந்திரன் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்

இதை சொல்வதற்கு உங்களுக்கு வெட்கம் இல்லை நீங்க எல்லாம் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அரசியல்வாதி

சுமந்திரன் சேருக்கு மீண்டும் மீண்டும் எமது நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். சுமந்திரன் ஐயா மட்டுமல்ல முழு தமிழ் சமூகமுமே முஸ்லீம் மக்களுக்குச் செய்யும் மாபெரும் உதவியாகும்.

Post a Comment