Header Ads



தேர்தலை நடத்துவதற்காக சில, சுகாதார நடைமுறைகள் முன்வைப்பு

கொவிட் - 19 தொற்றுநோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி தேர்தல் கடமைகளில் ஈடுப்படும் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்களுக்கு கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்க வேண்டியது கட்டாயமாகும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கொவிட் - 19 வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கடந்த மாத் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும், சுகாதார தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு முன்னர் சிலவேளை தேர்தலை நடத்த வேண்டி ஏற்படின் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடை முறைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. 

இது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. 

இதில் தொற்றுநோயியல் நிபுணர்கள், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள், தேர்தலுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம், அரச பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கொவிட் 19 ஒழிப்பு படையணியின் உறுப்பினர் ஒருவரை உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டது. 

அதன்படி, அந்த குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

இதேவேளை, பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியல் யாப்புக்கு எதிரானது என தீர்ப்பளித்து அதனை சட்டபூர்வமற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.