Header Ads



எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினருடைய முன்னுதாரணம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒன்று௯டல், சமூக இடைவெளி பேணல் என அரசினதும், சுகாதார துறையினதும் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மஸ்ஜித்களும் மூடப்பட்டிருக்கின்றன. 

இதனால், மஸ்ஜித்களில் கடமைபுரியும் உலமாக்களுக்கும், முஅத்தின்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குவதில் பெரும்பாலான நிர்வாக சபையினர் இழுத்தடிப்பு செய்கின்றனர் என்பது சக உலமா நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

மஸ்ஜித்களில் கடமையாற்றும் அனைத்து உலமாக்களுக்கும், முஅத்தின் மற்றும் ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குமாறு வக்பு சபை தலைவரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அஷ்ரப் ( நளீமி) அவர்கள் கடந்த மாதமே ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல மஸ்ஜித்களில் உலமாக்கள் மற்றும் முஅத்தின்களுக்கான கொடுப்பனவுகள் தாமதமாகவும், பகுதி பகுதிகளாகவும் இன்னும் அரைவாசியாகவுமே வழங்கப்பட்டுள்ளமையை அறிந்துகொள்ளக் ௯டியதாக இருந்தது.

எனினும், மஸ்ஜித்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த போதிலும் எமது புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆப் மஸ்ஜித் நிர்வாக சபையினர் , தாராளம் மனம் கொண்ட மஹல்லாவாசிகளின் பூரண ஒத்துழைப்புடன் தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் கடமைபுரியும் உலமாக்கள் மற்றும் முஅத்தின்களுக்கு உரிய மாதாந்த சம்பளம் மற்றும் பெருநாள் கொடுப்பனவு என்பனவற்றை எவ்வித குறையுமின்றி இம்முறையும் வழங்கியுள்ளனர்.

இதற்காக நிர்வாக சபையினருக்கும், மஹல்லாவாசிகளுக்கும் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் ஊழியர்கள் சார்பில் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் எல்லா நலவுகளையும் வழங்குவதுடன், வாழ்க்கையில் பரக்கத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்கிறேன்.

அத்துடன், இதுபோன்ற உதவிகளை உலமாக்களுக்கும், மஸ்ஜித்களின் ஊழியர்களுக்கும் வழங்கிய அனைத்து நிர்வாகத்தினருக்கும், மஹல்லாவாசிகளுக்கும் இறைவனிடம் துஆப் பிராத்தனை செய்கிறேன்.

எமது எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினருடைய இந்த நடவடிக்கைகளானது புத்தளம் மாவட்டத்தில் மாத்திரமின்றி, ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்து மஸ்ஜித் நிர்வாக சபையினருக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.


அஷ்ஷெய்க் என். அஸ்மீர் ( உஸ்வி)
பேஷ் இமாம்
எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித்
நாகவில்லு.

2 comments:

  1. நல்லதொரு செயல்..... அல்லாஹ் உங்களை பொருந்தி கொள்வானாக.

    ReplyDelete
  2. கிண்ணியாவில் அதிக பள்ளிகளில் இதுதான் நடந்து.

    ReplyDelete

Powered by Blogger.