Header Ads



இறுதி கொரோனா நோயாளி குணமடைந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்றிய இறுதியான நோயாளியும் குணமடைந்த இரண்டு வாரங்களின் பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்பது நாட்டு மக்களின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் அண்மையில் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்று பரவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

நான் நாட்டின் பொது நிலைப்பாட்டுக்காக குரல் கொடுக்கின்றேன்.

இதனால், இறுதி கொரோனா நோயாளி குணமடைந்து, கொரோனா நோயாளிகள் எவரும் இல்லை என்ற நிலைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.