Header Ads



ஐரோப்பாவில் சிறுவர்களிடம் பரவிவரும், நோய் பற்றி இலங்கையிலும் அவதானம்


ஐரோப்பாவிலும், மேற்கத்தைய நாடுகளிலும் சிறுவர்கள் மத்தியில் பரவிவரும் கவசாகி போன்ற நோய் தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இந்த நோய் ஏற்பட்டுள்ளமையான எவ்வித அறிக்கைகளிலும் இல்லை.

எனினும் தொடர்ந்தும் இந்த நோய் தொடர்பாக ஆராய்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கவசாகி நோய் பல ஆண்டுகளுக்கு முன்னர் முதலில் ஜப்பானில் கண்டறியப்பட்டது.

இதன் பின்னர் அந்த நோய் வைரஸானது நோய் தொற்றியுள்ள சிறுவர்கள் மத்தியில் பரவிவருவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கவசாகி நோயாலும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உலகளாவிய மருத்துவ ஆய்வாளர்கள் இது தொடர்பில் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கு சிகிச்சையளித்து வரும் இலங்கை வைத்தியர்கள் இந்த நோய் எதிர்காலத்தில் வந்தாலும் அதனை கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கொரோனா வைரஸ் சிறியளவிலான குணங்குறிகளுடன் வருவதால் சிறுவர்கள் விரைவில் குணமாகிவிடுவார்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அமரிக்க நியூயோர்க்கில் பல்வேறு குணங்குறிகளுடன் 93 சிறுவர்கள் கொரோனா வைரஸை ஒத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.