Header Ads



மருத்தவராக கடைமையை செய்து, இறைவனுக்கான கடமையை முடித்தவருக்கு பாராட்டு குவிகிறது...!


அறுவை சிகிச்சையை செய்து முடிக்கும்போது நோன்பு திறந்த மருத்தவர். மருத்தவராக கடைமையை செய்து இறைவனுக்கான கடமையை முடித்தார் என பாராட்டு குவிகின்றன.

சவுதி அரேபியாவில் பிரபல மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு இருந்த ஒரு நோயாளிகளுக்கு பெரு மூளையில் இரத்த போக்கு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். அவருக்கு உடனே அறுவை சிகிச்சை நடத்த மருத்துவமனை நிர்வாகம் பல மருத்தவர்களை அணுகியது, நோன்பு திறக்க சில மணி நேரங்கள் என்பதால் பலர் உடையை போன் ரீச் ஆக வில்லை..

சவூதி பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் அப்துல் ரசாக் அல் ஹாசிமி அவர்களை தொடர்பு கொண்டபோது, உடனே மருத்துவமனையில் நுழைந்து, உடனே அறுவை சிகிச்சை செய்தார் சரியாக சிகிச்சை முடித்து நோயாளிக்கான அனைத்து சிகிச்சை கொடுத்து முடிக்கும் போது, நோன்பு திறக்கும் நேரம் வந்து விட்டது..

அருகில் இருந்து மருத்துவர் ஒருவர் இரத்ததான பிரிவில் உள்ள குளிர் பானத்தை வாங்கி, மருத்துவர் அப்துல் ரசாக் அவர்களுக்கு வழங்கினார், மருத்துவர் கையில் அறுவை சிகிச்சை முடித்து இரத்தம் சுற்றி இருந்தது, அருகில் உள்ள நர்சு ஒருவர் அவருக்கு குளிர் பானத்தை தனது கையால் கொடுக்க நோன்பு திறந்தார்..

அவருடன் இருந்த மருத்தவர்கள் பணி ஆட்கள் அனைவரும் வேறு மத்ததை சேர்ந்தவர்கள்.  இந்த அருமையான விசயத்தை அருகில் இருந்த மருத்துவர், புகை படத்தை எடுத்து தனது முகநூலில் தனது சக பிரபல இஸ்லாமிய மருத்துவர் மனிதனுக்கு மருத்தவராக செய்ய வேண்டிய கடைமையை முடித்து இறைவனுக்கு உண்டான நன்மையை செய்து முடித்தார் என பதிவு செய்து உள்ளார் இந்த நிகழ்வு மிக பெரிய பாராட்டை பெற்று உள்ளது..

INTJ ஊடக பிரிவு செய்தி..

No comments

Powered by Blogger.