Header Ads



வித்தியாசமான முறையில் பதவியேற்ற, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்


காணொளி மாநாட்டின் மூலமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் நியமன சான்றிதழை சமர்ப்பித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் இன்று மாலை காணொளி மாநாட்டின் (Video Conference) ஊடாக நடைபெற்ற நிகழ்வொன்றில் தனது நியமன சான்றிதழை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் சமர்ப்பித்தார்

இந்த நிகழ்வினை ஒரு புத்தாக்க முயற்சியின் அடிப்படையில் ஏற்பாடு செய்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த உயர் ஸ்தானிகர், கொவிட்-19 நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்பதை இலங்கை மற்றும் இந்திய தலைமைத்துவங்களால் மிகவும் ஆழமாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இன்றைய இந்த சிறந்த முயற்சியானது இருநாடுகளும் தமது நட்பு மற்றும் பன்முக உறவுகளின் அடிப்படையில் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தினையும், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டையும் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


No comments

Powered by Blogger.