Header Ads



சீன ஆய்வு கூடத்திலிருந்தே, கொரோனா உருவாகியது - ஆதாரங்கள் உள்ளதென்கிறார் டிரம்ப்

சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் அமைந்துள்ள வைராலஜி ஆய்வு கூடத்தில் இருந்துதான், கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பலியாக காரணமான கொரோனா வைரசை பரப்பிய சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

இதற்காக அந்த அமைப்பு வெட்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைரசை சீனா தான் பரப்பியது என்பதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என ஊடகங்கள் கேட்டதற்கு, போதிய ஆதாரம் உள்ளது. உடனடியாக, 'அந்த விவரத்தை உங்களிடம் தற்போது கூற முடியாது' என்றார். வைரசை பரப்பிய சீனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,095,210  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 63,861 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு நாளுக்கு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Mr Trump! You together with your alliance impose trade embargo against China immediately. Send your team that was sent to Iraq to investigate WMD (weapon of mass destruction) to China. Declare no fly zone over China. Finally send your Air Force to teach a lesson to China. Maybe this time China will teach a lesson to you.😂

    ReplyDelete
  2. Reveille the evidence first, you became joker nowdays

    ReplyDelete

Powered by Blogger.