Header Ads



அமைச்சர் பந்துலவின் கருத்து முட்டாள்த்தனமானது - ஹரின்

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 7 பேரே உயிரிழந்துள்ளதால், அது பற்றி பெரிதாக கணக்கில் எடுக்க தேவையில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ள முட்டாள்த்தனமாக கருத்தானது தற்போதைய அமைச்சரவை எப்படியானது என்பதை வெளிக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கலாநிதி பட்டம் உட்பட அனைத்து பட்டங்களுக்கும் தகுதியான பந்துல குணவர்தன, டெங்கு நோய் காரணமாக நாட்டில் ஒரு வருடத்திற்கு 500 முதல் 600 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா பற்றி அச்சப்பட தேவையில்லை எனக் கூறியுள்ளார். இதோ இலங்கை அமைச்சரவையின் தரம் எப்படி என்று புரிகின்றதா?.

பந்துல குணவர்தனவை பற்றி நான் பெரிதாக ஆச்சரியப்பட மாட்டேன். 2 ஆயிரத்து 500 ரூபாயில் ஒரு குடும்பம் வாழ முடியும் என்று கூறியவர் பந்துல. இதன் காரணமாகவே தற்போது 5 ஆயிரம் ரூபாயை வழங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் என்பது முழு உலகத்திற்குமான அனர்த்தம். அந்த வைரஸ் மிக வேகமாக பரவும். இதனை புரியாதவர்கள் அமைச்சரவையில் இருந்து கொண்டு டெங்கு நோயில் 500 பேர் இறந்தார்கள், கொரோனா பற்றி அச்சப்பட தேவையல்லை எனக்கூறுவார்களாயின் இவர்கள் எப்படியான அறிவற்றவர்களாக இருப்பார்கள் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன, டெங்கு நோய் காரணமாக வருடத்தில் 500 முதல் 600 பேரை வரை இந்த போதும், நாட்டில் அனைத்து தேர்தல்களும் நடந்ததாகவும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 7 பேர் மாத்திரமே இறந்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.