Header Ads



கொரோனாவும் மிரட்டுகிறது - ஆபத்தான நிலையில் 9 இலட்சம் ரோஹிங்யர்கள்


மயான்மரில் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலைக்கு அஞ்சி அங்கிருந்து வீடு,வாசல்,உடைமைகள் என அனைத்தையும் இழந்து வங்காளதேச எல்லையில் வெட்டாவெளியில் வெளியேறி கிடக்கும் ரோஹிங்யர்கள் சுமார் 9 லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளார்கள். ஒரு சதுர மைலுக்கு 1 லட்சம் பேர் என்கிற கணக்கில் குறைவான இடத்தில் மிக மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். மொத்தமே 34 கேம்புகள் மட்டுமே உள்ள நிலையில் அவர்களின் ஜனத்தொகை 8,55,000 பேர் போதிய உணவும், குடிநீரும்,மருத்துவமும், இருப்பிடமும் இன்றி தவித்து வருகின்றனர்.

கொரனா ஊரடங்கில் அவர்களை கவனிக்கவோ அவர்களுக்கு உணவளிக்கவோ யாருமில்லாத நிலையில் ஐநாவின் குழுக்களும் அவர்களை கைவிட்டு வருகிறது. வங்காளதேசத்தின் காக்ஸ் பஸார் அருகே அமைந்திருக்கும் இவர்களது கேம்புகளில் போதிய கழிவறைகளும் அதற்கு தண்ணீர் வசதியும் இல்லாத நிலையில் இந்த ரோஹிங்ய அகதிகளில் பலருக்கு கொரனா தொற்றும் உறுதியாகியுள்ளது. கொரனா தொற்று உறுதியாகியுள்ள நோயாளிகளை மட்டும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு கேம்புகளை முற்றிலுமாக யாரும் வெளியேறாத வண்ணம் அடைத்துபூட்டி வைத்துவிட்டது வங்காளதேச அரசு மேலும் வேறு யாருடைய உதவியும் கிடைக்காதபடி தன்னார்வலர்களையும் உதவ விடாதபடி தடுத்து வைத்துள்ளது. 

கழிவறைக்கே தண்ணீர் இல்லை என்பதை விட, அவர்களுக்கு கழிவறைகளே இல்லை என்ற நிலையில்...Hand Sanitizer, mask, Social Distancing என்பதல்லாம் எட்டாக்கனி என வைஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகத்தில் மிகவும் துன்பமிகு சூழலில் போராடி வரும் ரோஹிங்யர்கள் தான் உலக மக்களின் பிரார்த்தனைகளில் இருக்க வேண்டியவர்கள்.

கைவிடப்பட்ட நிலையில் ரோஹிங்ய மக்கள்.

- S. Nasrath Rosy

1 comment:

  1. யா அல்லாஹ் இந்த ரம்ழானுடைய இறுதி நாட்களில் இவர்கள் மீது பரக்கத் செய்வாயாக

    ReplyDelete

Powered by Blogger.