Header Ads



ஆடிப்போயுள்ள அமெரிக்கா - இதுவரை 90 ஆயிரம் பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 48 ஆயிரத்து 19 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 26 லட்சத்து 38 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 780 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.   

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளில் அந்நாடு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் தற்போது வரை 15 லட்சத்து 27 ஆயிரத்து 951 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 90,980
ஸ்பெயின் - 27,650
இங்கிலாந்து - 34,636
பிரேசில் - 16,122
இத்தாலி - 31,908
பிரான்ஸ் - 28,108
ஜெர்மனி - 8,049
ஈரான் - 6,988
கனடா - 5,782
பெல்ஜியம் - 9,080
மெக்சிகோ - 5,177
நெதர்லாந்து - 5,680

No comments

Powered by Blogger.