Header Ads



ஜனாஸா எரிப்புக்கு எதிரான, விசாரணை ஜுன் 8 க்கு ஒத்திவைப்பு - சுமந்திரன், றுஸ்தி, எர்மிஷா ஆஜர்


கொவிட் - 19 இனால் உயிரிழந்த ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜுன் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 இனால் உயிரிழந்த ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (20) புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. நீதியரசர் தெஹிதனிய தலைமையில் மூவர் அடங்கிய நீதியரசர் குழுவினால் இந்த மனு மீதான விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து றுஸ்தி ஹபீப், எர்மிஷா டிகேல் ஆகியோர் மன்றில் ஆஜராகினர். இதன்போதே, இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜுன் 8ஆம் திகதி வரை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

சட்டத்தரணி சபீனா மஹ்ரூபினால் இந்த மனு நெறிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. May Allah help all of this good lawyers succeed in this case. Also our prayers that RACISM will fail in this land and people of all race will have peaceful life with their rights fulfilled.

    ReplyDelete

Powered by Blogger.