Header Ads



கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 76,000 - அதிரும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். 

வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 81 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் புதிதாக மேலும் 759 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 558 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.  

1 comment:

  1. கலக்கமடைய இங்கு ஒன்றும் கிடையாது முஸ்லிம் நாடுகளில் நீங்கள் மனசாட்சியே இல்லாமல் கொண்று தொலைத்ததை சற்று ஞாபகம் செய்து பாருங்கள்

    ReplyDelete

Powered by Blogger.