Header Ads



வெளிநாடுகளில் பணியாற்றி வரும் 60,000 பேர் நாடு திரும்ப விண்ணப்பம்

வெளிநாடுகளில் தொழில்களில் ஈடுபட்டு வரும் 60,000 பணியாளர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.

தங்களை நாட்டுக்கு மீள அழைத்துக் கொள்ளுமாறு இவ்வாறு அறுபதாயிரம் பணியாளர்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் ஊடாக கோரியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் இவ்வாறு தங்களை தாய் நாட்டுக்கு அழைத்துக் கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களில் பலர் தொழில்களை இழந்தவர்கள் எனவும், சிலர் இருப்பிடங்களை இழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானவர்களை அழைத்து வந்து தனிமைப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.