Header Ads



50 லட்சம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.

தற்போதைய நிலவரப்படி, 50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 27 லட்சத்து 6 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 400 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

இந்த கொடிய வைரசில் இருந்து 19 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா - 15,70,908
ரஷியா - 3,08,705
ஸ்பெயின் - 2,78,803
பிரேசில் - 2,71,885
இங்கிலாந்து - 2,48,818
இத்தாலி - 2,26,699
பிரான்ஸ் - 1,80,809
ஜெர்மனி - 1,77,842
துருக்கி - 1,51,615
ஈரான் - 1,24,603
இந்தியா - 1,06,750
பெரு - 99,483
சீனா - 82,965
கனடா - 79,112
சவுதி அரேபியா - 59,854
பெல்ஜியம் - 55,983
மெக்சிகோ - 54,346

No comments

Powered by Blogger.