Header Ads



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு அறிகுறிகள் தென்படவில்லை

கொரோனா வைரஸ் அறிகுறிகள் காட்டாத நோயாளிகளிடமிருந்து சமூகத்திற்குள் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இதனால் ஒவ்வொரு நபரும் சமூக இடைவெளியை பேணுவது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் நூற்றுக்கு 50 வீதமானோர் இதுவரை அறிகுறிகள் தென்படாதவர்கள் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு பரவக்கூடிய நோய் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இது டெங்கு நோய் அல்லது நுளம்பினால் பரவும் நோய் அல்ல. இதனால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.