Header Ads



4 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு - மக்களுக்கு பல்வேறு விதிமுறைகள்

கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஏனைய பிரதேசங்களில் மக்கள் சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாகும் எனவும் அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதனை நிறுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடமைகளுக்காக அலுவலங்களுக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு தங்கள் கடமைக்காக வழங்கப்பட்டுள்ள கடிதங்களை பயன்படுத்தி செல்ல முடியும்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் சிரமங்களை தவிர்க்கும் நோக்கிலும் நாளை முதல் அரசாங்க மற்றும் தனியார் பிரிவு அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு செல்லும் போது அன்றைய தினங்களில் வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தில் உள்ள நபர்கள் மாத்திரம் வீட்டை விட்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரட்கு நீக்கப்படுவதனால் கொரோனா ஆபத்து இல்லை என நினைத்து செயற்படுவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.