Header Ads



4 நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கலவை: வங்கதேச மருத்துவர்கள் கண்டுபிடிப்பு


கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பரிதவித்து வருகின்றன.

உலக ஆராய்ச்சியாளர்களும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய கடந்த 6 மாதமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் இன்றளவும் அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் தடுப்பு மருந்தினை கண்டறியவில்லை. சில நாடுகள் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றதாகவும், மனிதர்களுக்கு சோதனையிட இருப்பதாகவும் கூறின.

இந்நிலையில், வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்துள்ளது.

தரெக் ஆலம் தலைமையிலான குழு, கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு மெக்டின் மற்றும் டாக்ஸி-சைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து அளித்தும் சோதித்துள்ளனர்.

60 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் 4ம் நாளிலேயே 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அவர்களுக்கு முதல் 3 நாட்களில் சுவாச பிரச்னை சீரடைந்தும், 4ம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன.

மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.

1 comment:

  1. May Allah bless them, and the world to overcome from this pandemic.

    ReplyDelete

Powered by Blogger.