Header Ads



ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய 450 கோடி ரூபாவை மக்களுக்காக செலவுசெய்ய வேண்டும் - சஜித்

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய 450 கோடிப் பணத்தை மக்கள் நலனுக்காக உடனடியாக செலவு செய்ய வேண்டுமென முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனின் தூதுவர் டெனிஸ் ஸெய்ப்க்கும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இருவரும் ராஜதந்திர ரீதியான பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடினர்,

ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கை பொருளாதாரத்தையும் மற்றும் மக்கள் வாழ்க்கையையும் கட்டி எழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மிக வேகமாகவும் முறையாகவும் தங்களது தலையீட்டை மேற்கொள்வதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இப்போதாகும் போது இலங்கைக்கு 22 மில்லியன் யூரோ அல்லது 450 கோடி ரூபா உதவி ஐரோப்பிய சமூகத்திடமிருந்து கிடைத்திருப்பதாக ஐரோப்பிய யூனியனின் தூதுவர் டெனிஸ் ஸெய்ப் தெரிவித்தார்.

சுகாதார உபகரணங்களைப் பெறுவதற்கு 41 கோடி ரூபாவும், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு 71 கோடி ரூபாவும், விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு 331 கோடி ரூபாவும் உதவியாக வழங்கப்பட்டதாக தூதுவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சஜித் பிரேமதாஸ தூதுவரிடம், எங்களுடைய நாட்டின் சிறு மற்றும் மத்தியமட்ட கைத்தொழில் துறையினர் எதிர்நோக்கி இருக்கின்ற நிதிப் பிரச்சினையை மேம்படுத்துவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு, இந்த நாட்டினுடைய கைத்தொழில்சாலைகளுடைய ஊழியர்களது தொழில் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே நிதி ரீதியாக பலப்படுத்தலை ஐரோப்பிய சமூகத்திடமிருந்து வழங்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்பாக எமது சிறு மற்றும் மத்திய தர கைத்தொழில் துறையைப் பாதுகாப்பதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சஜித் பிரேமதாஸ தூதுவரிடம் கேட்டுக் கொண்டார்.

அதேநேரம் ஐரோப்பிய யூனியன் வழங்கி இருக்கின்ற 450 கோடி ரூபாவையும் மக்கள் நலனுக்காக உடனடியாக பயன்படுத்த வேண்டுமென்று நாங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். இப்போதாகும் போது நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது.

விவசாயத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. சுகாதாரத்துறையிலே உபகரணங்களுக்குப் பற்றாக்குறை இருக்கின்றது. நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்கும் ஒரு சின்ன வேலைத்திட்டத் தை ஆரம்பித்திருக்கின்றோம். நாட்டு மக்களுடைய நலனுக்காக எவ்வித வஞ்ஞனையும் இன்றி  செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. ATHANAI NEE SHOLLAVENDIYATHILLAI.
    ENDA NOKATHITKAAKA KODUKAPATTATHO,
    ATHARKAAKA SHELAVU SHEIYAPADUM.
    UNDA ARASHAANGATHILA ENRAAL
    PANAM ENGO POI IRUKKUM.
    MATHIYA VANGI MAATHIRI,!!!

    ReplyDelete

Powered by Blogger.