Header Ads



கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் 3 லட்சத்தை கடந்தது - நாடுகளின் விபரம் இணைப்பு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு இந்த கொரோனா பரவியுள்ளது. 

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 44 லட்சத்து 79 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 24 லட்சத்து 96 ஆயிரத்து 689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 879 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 960 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 85,518
ஸ்பெயின் - 27,321
ரஷியா - 2,305
இங்கிலாந்து - 33,614
இத்தாலி - 31,368
பிரேசில் - 13,551
பிரான்ஸ் - 27,074
ஜெர்மனி - 7,868
துருக்கி - 3,952
ஈரான் - 6,854
சீனா - 4,633
இந்தியா - 2,549
பெரு - 2,169
கனடா - 5,302
பெல்ஜியம் - 8,903
நெதர்லாந்து - 5,590
மெக்சிகோ - 4,220
ஈக்வடார் - 2,334
சுவிஸ்சர்லாந்து - 1,872
போர்ச்சீகல் - 1,184
ஸ்வீடன் - 3,529
அயர்லாந்து - 1,497
இந்தோனேசியா - 1,043
ரூமேனியா - 1,046

No comments

Powered by Blogger.