Header Ads



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 36 லட்சத்து 10 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 21 லட்சத்து 89 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 75 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 70 ஆயிரத்து 448 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்து 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 11,98,012
ஸ்பெயின் - 2,48,301
இத்தாலி - 2,11,938
இங்கிலாந்து - 1,90,584
பிரான்ஸ் - 1,68,693
ஜெர்மனி - 1,65,745
ரஷியா - 1,45,268
துருக்கி - 1,26,045
பிரேசில் - 1,01,826
ஈரான் - 98,647
சீனா - 82,880
கனடா - 59,858
பெல்ஜியம் - 50,267
பெரு - 45,928
இந்தியா -  42,836
நெதர்லாந்து - 40,770
ஈக்வடார் - 31,881
சுவிட்சர்லாந்து - 29,981
சவுதி அரேபியா - 28,656
போர்ச்சீகல் - 25,524
மெக்சிகோ - 23,471
ஸ்வீடன் - 22,721
அயர்லாந்து - 21,772
பாகிஸ்தான் - 20,884
சிலி - 20,643

No comments

Powered by Blogger.