Header Ads

முகக் கவசம் அணியாதவர்களுக்கு கட்டாரில் மூன்று ஆண்டுகள் சிறை

கட்டாரில் பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தவறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை விதிக்கும் உலகின் மிகக் கடுமையான தண்டனை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வளைகுடாவின் குட்டி நாடான கட்டாரில் 30,000க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது 2.75 மில்லியன் மக்கள் தொகையில் 1.1 வீதமாகும். 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சிறு தேசங்களான சான் மரினோ மற்றும் வத்திக்கான் மாத்திரமே இதனை விடவும் தனி நபர் தொற்று வீதம் அதிகமாக உள்ளது என்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின் கணக்கெடுப்பு காட்டுகிறது.

இந்நிலையில் கட்டாரின் இந்த புதிய சட்டத்தை மீறுபவர்கள் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 55,000 டொலர் வரை அபராதத்திற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

தனியாக வாகனத்தில் செல்லும் ஓட்டுநர்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டபோதும் இந்த சட்டம் அமுலாகும் முன்னரே சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு முகக் கவசம் அணிய பொலிஸார் அறிவுறுத்தி வந்தனர்.

உலகெங்கும் சுமார் 50 நாடுகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி இருந்தபோதும் அதன் தாக்கம் பற்றி விஞ்ஞானிகளிடையே மாறுபட்ட கருத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாட் நிர்வாகம் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனையை விதித்திருப்பதோடு மொரோக்கோவில் இதனை மீறுபவர்களுக்கு மூன்று மாத சிறை மற்றும் 130 டொலர் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது
 கட்டாரில் பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தவறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை விதிக்கும் உலகின் மிகக் கடுமையான தண்டனை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வளைகுடாவின் குட்டி நாடான கட்டாரில் 30,000க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது 2.75 மில்லியன் மக்கள் தொகையில் 1.1 வீதமாகும். 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சிறு தேசங்களான சான் மரினோ மற்றும் வத்திக்கான் மாத்திரமே இதனை விடவும் தனி நபர் தொற்று வீதம் அதிகமாக உள்ளது என்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின் கணக்கெடுப்பு காட்டுகிறது.

இந்நிலையில் கட்டாரின் இந்த புதிய சட்டத்தை மீறுபவர்கள் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 55,000 டொலர் வரை அபராதத்திற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

தனியாக வாகனத்தில் செல்லும் ஓட்டுநர்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டபோதும் இந்த சட்டம் அமுலாகும் முன்னரே சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு முகக் கவசம் அணிய பொலிஸார் அறிவுறுத்தி வந்தனர்.

உலகெங்கும் சுமார் 50 நாடுகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி இருந்தபோதும் அதன் தாக்கம் பற்றி விஞ்ஞானிகளிடையே மாறுபட்ட கருத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாட் நிர்வாகம் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனையை விதித்திருப்பதோடு மொரோக்கோவில் இதனை மீறுபவர்களுக்கு மூன்று மாத சிறை மற்றும் 130 டொலர் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.