Header Ads



கட்டுப்பாட்டுடன் செயற்படாவிடின் 2 ஆவது கொரோனா அலை உருவாகும், மக்களின் செயற்பாட்டில் திருப்தியில்லை

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் இரண்டாவது கொரோனா அலை உருவாகுமென வைத்திய ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொழும்பு,கம்பஹா மாவட்டங்களில் ஊரங்கு அமுலாகிய நிலையில் நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் அரச மற்றும் தனியார் அலுவலக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியுள்ள நிலையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்ற தவறினால் இரண்டாவது கொரோனா அலை ஏற்படலாமென வைத்திய ஆய்வு நிறுவன பணிப்பாளர் ஜெயருவன் பண்டார கூறியுள்ளார்.

சுகாதார தரப்பினர் வழங்கும் சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.தவறினால் பாரதூரமான விளைவுகளுக்குமுகங்கொடுக்க நேரிடும் எனவும்  அவர் குறிப்பிட்டார்.

இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பும்வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஊரடங்கு அமுலிலுள்ள கொழும்பு மற்றும் கம்பஹ மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் விசனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு பகுதியளவில் நிர்வாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் செயற்பாடுகள் திருப்தியாக இல்லையென பாதுகாப்பு தரப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது தெரிந்ததே. 

No comments

Powered by Blogger.