Header Ads



ஒரே பார்வையில் 29 ரமழான் கேள்விகளின் தொகுப்பு (முழு விபரம் இணைப்பு)

கேள்வி  - 1
A, நோன்பு எதற்காக விதிக்கப்பட்டது (கடமையாக்கப்பட்டது) என்ற இறை வசனத்தை குறிப்பிடுக..!
B, கொரோனா வைரஸ் என்ற நோய் எங்கு, எந்த நாட்டில் அளையாளம் காணப்பட்டது..?

கேள்வி -  2
A, "அஸ் ஸவ்ம்" என்ற பதம், எதனைக் குறிக்கின்றது..? இச்சொல் அல் குர்ஆனில்  எத்தனை, இடங்களில் இடம் பெறுகின்றது ?
B, கொவிட் 19 நோயினால் பீடிக்கப்பட்ட, முதல் நோயாளிக்கு இலங்கையில் எந்த, மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப்பட்டது?

கேள்வி  3
A, 'அர் ரய்யான்' என்ற பதம்  எதனைக் குறிக்கின்றது..?  அதுபற்றி கூறும்  ஹதீஸை முழுமையாக எழுதுக.
B, உலக சுகாதார அமைப்பின்,  தற்போதைய பிரதம  பணிப்பாளர் யார்...?

கேள்வி - 4
A, ஸல்லூ பீ புயூதிகும்  மற்றும் ஸல்லூ பீ ரிஹா லிகும் என்ற பதங்கள் எதனைக் குறிக்கின்றது..?
B, கொவிட் நோயினால் மரணித்த 2 நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்..?

கேள்வி 5
A, அல்லாஹ்வின் பாதுகாப்பை ஓரு மனிதன் பெறுவதற்கு, தினமும்  ஓதவேண்டிய துஆக்களில் இரண்டைக குறிப்பிடுக
B, ஒருமுறை கொலரா தொற்று நோய் ஏற்பட்ட பொழுது, அங்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறிய, நபித் தோழர் யார்? அந்த பிரதேசத்தின் பெயரையும் குறிப்பிடுக.

கேள்வி  6
A, கொவிட் 19 வைரஸ் சீனா வுஹானிலுள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக நோபல் பரிசுபெற்ற  பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் கூறியுள்ளார். அவரின் பெயர் என்ன..?
B, நபி (ஸல்)  அவர்கள்  தும்மும் பொழுது ஏதாவதொரு கைக்குட்டைய முகத்தில் வைத்துதான்  தும்முவார்கள். இதுகுறித்து வந்த நபிமொழியை ஆதாரத்துடன் குறிப்பிடுக...!

கேள்வி 7
A, ரமழான் மாதத்தில் இறக்கப்பட்ட புனித அல்குர்ஆனை  அதிகமாக ஓதுங்கள். மறுமையில்  அது ஓதியவருக்கு ஸபாஅத்  பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை,  முழுமையாக ஆதாரத்துடன் எழுதுக.
B, இலங்கை நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  இராணுவத்தினருடைய பங்களிப்பு மிகச் சிறந்ததாக அமையப் பெறுகிறது. நம் நாட்டு இராணுவத் தளபதியின் பெயர் என்ன..?

கேள்வி 8
A, ஓரு யுத்தத்தின் பொழுது நபித்தோழர் ஒருவர்  கபன் செய்யப்படுவதற்கு  போதிய துணியில்லாமல் காணப்பட்ட பொழுது, இருந்த  சிறு துணியினால் தலை மூடப்பட்டு ஏனைய பகுதிகளை இலை, குலைகளினால் மறைத்து நல்லடக்கம் செய்யுமாறு நபிகளார் கட்டளையிட்டார்கள்.  அந்த யுத்தத்தின் பெயரையும், ஸஹாபியின்  பெயரையும் குறிப்பிடுக.
B, உலகில் கொவிட் 19 நோயினால் அதிகளவில் நோய் தொற்றிய நாட்டையும், நோய் தொற்றாத நாடொன்றையும் குறிப்பிடுக

கேள்வி 9,
A, 'அல்லாஹ் அல்லாத தெய்வங்களை வணங்கக்கூடியவர்களை நீங்கள்  ஏச வேண்டாம்' என குறிப்பிடப்படும் குர்ஆன் வசனத்தையும், அதன் பொருளையும் எழுதுக.
B, கொவிட் 19 கொரோனா வைரஸிலிருந்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளாக பேண வேண்டிய 4 பிரதான வைத்திய ஆலோசனைகளை குறிப்பிடுக

கேள்வி 10,
A, 'மனிதர்களே நிச்சயமாக உங்களை நாம் ஓர ஆணிலிருந்தும் மேலும் ஓர  பெண்ணிலிருந்தும் தான் படைத்தோம், மேலும் உங்களை நாம் கிளைகளாக ...' என்று தொடரும் குர்ஆன் ஆயத்தை பொருளுடன் எழுதுக.
B, இலங்கை நாட்டின் நலனில் பெரும் ஆர்வம் கொண்டு நாட்டுக்காக சேவை செய்தவர்கள் பலர்.  அவர்களுல் மர்ஹும்  பாபிச்சி மரிக்காரினால் நாட்டு நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரதான 4 விடயங்களைக் குறிப்பிடுக.

கேள்வி 11,
A, அல்குர்ஆனில் இடம்பெறும் 'ஓரு கிழக்கு மேற்குடைய நாயன்' மற்றும் இரு கிழக்குகள் இரு மேற்குகளின் நாயன், பல கிழக்குகள் பல மேற்குகளின் நாயன் எனக் குறிப்பிடப்படும் 3 ஆயத்துக்களையும் பொருளுடன் எழுதுக.
B, கொவிட் 19 பாதிப்பு காரணமாக சவூதி அரேபியாவில் மக்கா, மதீனாவுக்கான பயணத் தடை எத்தனையாம் திகதியிலிருந்து விதிக்கப்பட்டது?

கேள்வி 12
A, ஒருநாளில் 1000 நன்மைகளைப் பெற முடியுமா ? என நபிகளாரிடம் வினவிய பொழுது நபி (ஸல்)  கூறிய பதில் என்ன..? ஆதாரத்துடன் எழுதுக.
B, ஆபிரிக்கா கண்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு எது? அத்துடன்  உலக முஸ்லிம்களின் சனத் தொகையையும் குறிப்பிடுக

கேள்வி 13
A, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நூல்களின் மூன்றைக் குறிப்பிடுக
B, அல்குர்ஆனை முதன்முதலில் தமிழிலும்  ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தவர்களின் பெயர்களையும் ஆண்டுகளையும் குறிப்பிடுக..!

கேள்வி 14
A, கவலை மற்றும் கடன் நீங்க நபிகளார் கற்றுத்தந்த துஆவை ஆதாரத்துடன் எழுதுக
B, முதன் முதலில்  அரேபிய கணித தத்துவ ஆராய்ச்சியாளரின் பெயரைக் குறிப்பிடுக

கேள்வி 15
A, முன்னொரு காலத்தில் இலங்கையைச் சேர்ந்த சில தனவந்தர்களினால் ஸவூதி அரசுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.  இவை எத்தனையாம் ஆண்டு, எவ்வளவு பணம், யாரினால் வழக்கப்பட்டது?
B, அண்மைய காலத்தில் இந்திய அரசினால்  மிக மோசமாக முஸ்லீம்கள் அநீதிக்குட்படுத்தப்பட்டனர்.  அதிகமான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட இடம் எது..?

கேள்வி 16
A, வொவிட் 19 வைரஸிலிருந்து  தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான் வெளியே சுற்றாமல் வீட்டினுள் இருப்பது.  சுலைமான் நபியின் காலத்தில் எறும்புகளின் கூட்டமொன்றின் தலைமை எறும்பு ஏனைய எறும்புகளுக்கு உங்களுக்கு ஆபத்து வரும் எனவே 'உங்கள் வீடுகளுக்குள்ளே நுழைந்து கொள்ளுங்கள்' எனக்கூறியது. அந்த ஆயத்தையும், மொழி பெயர்ப்பையும் எழுதுக.
B, இலங்கைநாட்டு 1000 ரூபாய் நாணயத்தாளில்  யானையின் படத்தின் அருகில்ஒரு மனிதர் நிற்கின்றார். இவர் பற்றிய சரியான தகவலை எழுதுக.

கேள்வி 17
A, இஸ்லாம் அன்பையும், சாந்தியையும், கருணையையும் போதிக்கும் மார்க்கம். சம்பூரண வாழ்க்கைத் திட்டம். நபிகளார் தனது சிறிய தந்தை ஹம்ஸா (ரலி)  அவர்களின் ஈரலை கடித்துத் துப்பிய ஒருவரை மன்னித்தார். அவர் யார்..?
B, உலக குத்துச் சண்டை சம்பியன் என்ற பெருமையைவிட நான் ஓரு முஸ்லிம் என்பதே எனக்குப் பெருமை என அண்மையில் கூறிய வீரர் யார்..?

கேள்வி 18
A, 'நானோ ஒட்டகத்தின் சொந்தக்காரன், கஃபாவின் சொந்தக்காரனோ அதனைப் பாதுகாப்பான்' என யாரால், எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது?
B, இலங்கையின் தேசியக் கொடியாக சிங்கக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என, பாராளுமன்றத்தில் முன்வைத்தவர் ஓரு முஸ்லிம். அவரது பெயரினையும், ஆண்டினையும் குறிப்பிடுக.

கேள்வி 19A, அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1400 ஆண்டுகளைக் கடந்தாலும் 'இதுபோன்ற ஒன்றையோ (அல்குர்ஆன்) அல்லது சூறாவையோ முடியுமானால் கொண்டு வாருங்கள்' என சவால் விடுக்கின்றது. அந்த ஆயத்தையும், பொருளையும் எழுதுக.
B, இலங்கையின் தேசியக் கொடியில் சிறுபான்மை இனங்களைக் குறிக்கும் பச்சை மற்றும் செம்மஞ்சல்  நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது யாரால், எந்த ஆண்டில் தயார் செய்யப்பட்டது?

கேள்வி 20
A, 7 பெரும் பாவங்கள் எவை என்பதை ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குக
B, கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவலுக்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்றுதான் புகைத்தலோடு தொடர்புபட்டவர்கள். இவை பற்றி (புகைத்தல்)  எச்சரிக்கும் அல்குர்ஆன் வசனங்கள் இரண்டைக் குறிப்பிடுக.

கேள்வி 21
A, இஸ்லாம் கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தடை செய்துள்ளது. அவ்வாறு துப்பினால் என்ன பரிகாரம் என்பதையும் அழகாகக் குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி வந்துள்ள ஹதீஸைக் குறிப்பிடுக.
B, இலங்கை நாட்டில் ஐவேளை அதான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி மூலம் ஒலிபரப்புச் செய்யப்படுகின்றது. இம்முறை எந்த அரசியல் தலைவரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது?

கேள்வி 22
A, முன்னைய நாள் கல்வியமைச்சராக இருந்த ஒருவர்தான் மர்ஹும்  பதியுதீன் மஹ்மூத். அவர்கள் எத்தனையாவது ஆண்டில் எங்கு பிறந்தார் என்பதைக் குறிப்பிடுக.
B, மனிதனின் உருவமைப்பு 'நுத்பாஹ்' விலிருந்து ஆரம்பித்து பின்னர் அவை மாற்றமடைகின்றது. இதுபற்றியதான அல்குர்ஆன் வசனமொன்றையும் ஹதீஸ் ஒன்றினையும் குறிப்பிடுக.

கேள்வி 23,
A, மர்ஹும் NDH அப்துர் கபூர்  ஹாஜியார் அவர்களால் இந்நாட்டு முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு  மேற்கொள்ளப்பட்ட பிரதான 4 சேவைகளை குறிப்பிடுக.
B, நூஹ் நபியவர்கள் எத்தனை வருடங்கள் அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள்..?

கேள்வி 24,
A, இரு நபிமார்களின் மனைவியர் நரகில் நுழைவதாகவும், உலகில் 'நான் உங்களது உயர் மேலான படைப்பாளன்' என்று சொன்னவனின் மனைவி சுவர்க்கம்  நுழைவாள் எனவும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.  ஆதாரங்களுடன் எழுதுக..!
B, உலகில் மீண்டும் நீதமான ஆட்சி குறிப்பாக இந்தியாவின் வரவேண்டுமானால் உமர் (ரலி)  போன்ற ஒருவர்  பிறக்க வேண்டும் என்ககூறிய இந்தியத் தலைவர் யார்..?

கேள்வி 25,
A, நபிகளாரின் காலத்தில்  ஓரு ஸஹாபியின் உயிர் பிரிந்தபோது அல்லாஹ்வின் அர்ஸ் நடுங்கியது. அந்த நபித் தோழரின் பெயர் என்ன..?
B, முஸ்லிம்களை  "மரக்கலயா" என்று அழைக்கப்படுவதற்கான பிரதான 2 காரணிகளைக் குறிப்பிடுக.

கேள்வி 26
A, அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட முறையில் ஓர ஸஹாபியின்  பெயர் இடம்பெற்றுள்ளது.  அவர் யார்..?  ஆயத்தை முழுயாக குறிப்பிடுக
B, இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய பத்திரிகை எத்தனையாம் ஆண்டு, யாரால் ஆரம்பிக்கப்பட்டது? அதன் பெயரையும், ஆரம்பித்தவரின் பெயரையும் குறிப்பிடுக

கேள்வி 27,
A, எகிப்திய அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் எத்தனையாம் ஆண்டு, யாரால் ஆரம்பிக்கப்பட்டது..?
B, நயவஞ்சர்களுக்கு 2 தொழுகைகள்  பாரமானதாக தென்படும். இதுபற்றிய ஹதீஸை ஆதாரத்துடன் எழுதுக.

கேள்வி 28
A, அல்குர்ஆனில் 'அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்ற வசனம்  இடம்பெறும் இடங்களை குறிப்பிடுக.
B, 'மௌத்தைத் தவிர சகல நோய்களுக்கும் ஓரு பொருள் மருந்தாகும்'  என நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.  அதுபற்றிய ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக.

கேள்வி 29,
A, மறுமை நாளின் 'மீஸான் எனும் தராசில் நன்மைகள் மிகவும் கனமானதாக இருப்பதற்கான, பிரதான 2 காரணிகளை ஆதாரத்துடன் எழுதுக.
B, அறிவைக் கொண்டு அதன் மூலம் ஒருவனின் அந்தஸ்த்தை அல்லாஹ் உயர்த்துகின்றான் என்ற அல்குர்அன் வசனத்தை எழுதுக.



No comments

Powered by Blogger.