Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளான 28 கடற்படையினர், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி - வீரகேசரி


 (வீரகேசரி)

அம்பாறை ஓலுவில் தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று செவ்வாய்க்கிழமை (19.05.2020) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 80 பேர் அம்பாறை ஒலுவில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை பரிசோதனை செய்ததில் நேற்று முன்தினம் 10 பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் வெலிகந்தை கந்தக்காடு இராணுவ சிகிச்சை முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஏனைய கடற்படையினருக்கு பரிசோதனை மேற்கொண்ட நிலையில், நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


1 comment:

  1. Authorities must investigate why Navy personnel are being tested positive in great numbers. I think out of the total number affected over 30% are Navy guys.

    ReplyDelete

Powered by Blogger.