Header Ads



27 ஆம் திகதி வரை ராஜித்தவுக்கு விளக்கமறியலில்

கைதான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன  கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை ராஜித சேனாரத்தன  சி.ஐ.டி.யில் ஆஜரான பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு தொடர்பில் அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட பிணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதின்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் சி.ஐ.டி. என்ற குற்றப்  புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த பின்னர் அவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்தே முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன  கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.