Header Ads



ஜனாஸாக்களை அடக்கம்செய்ய அனுமதியுங்கள் - 22 முஸ்லிம் அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கை


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு 22 முஸ்லிம் இயக்கங்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பிரதான முஸ்லிம் அமைப்புகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை எரிக்க வேண்டுமென விடுத்து கடந்த மார்ச் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 185 நாடுகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக்  கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சூபி தரீக்காக்களின் சம்மேளனம், தேசிய சூரா கவுன்ஸில், முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, மேமன் சங்கம், மலாயர் மாநாடு, அஞ்சுமான் ஷைப், கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, கண்டி மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம், ஸம் ஸ ம் பவுண்டேசன், முஸ்லிம் வாலிபர் சம்மேளனம், றீகேயின் ஸ்ரீலங்கா, என்பனவும் இதில் அடங்குகின்றன.

No comments

Powered by Blogger.