Header Ads



213 பில்லியன் ரூபா பணம் அச்சடிப்பு - நிதியமைச்சின் செயலாளர் ஆடிகல உறுதிப்படுத்தினார்

கொரோனா வைரஸ் தொற்று பரவுகை ஆரம்பமான காலம் முதல் இதுவரையில் 213 பில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் அச்சிட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் வாரம் தொடக்கம் இதுவரையில் 213 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் இது மொத்த தேசிய உற்பத்தியின் 0.2 வீதம் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி இது எனவும் இவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நிதி அச்சிட நேரிடும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல தெரிவித்துள்ளார்.

கூடுதலாக பணத்தை அச்சிட்டால் அது எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற போதிலும் இலங்கைக்கு மட்டுமன்றி அமெரிக்காவிற்கும் இந்த நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் படுகுழியில் தள்ளிவிட்டு நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கைங்கரியம் முன்னெடுக்கப்படுகின்றது.ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அது பற்றி துறைபோன நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் எவரும் வாய்பேசாது மௌனியாக இருப்பது தான் மிகவும் ஆச்சரியம்!

    ReplyDelete

Powered by Blogger.