Header Ads



கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு ரூபா ஒரு பில்லியனை தாண்டியது

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஸ்ரீ லங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன. 

அதற்கான காசோலைகள் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 

மொபிடெல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நலின் பெரேரா உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர். 

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முக்கியஸ்தர்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர். 

Naturub Industries தனியார் நிறுவனம் 10 மில்லியன் ரூபாவையும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம் 03 லட்சம் ரூபாவையும், திரு. டிசில் குரே ஒரு லட்சம் ரூபாவையும், முன்னாள் அமைச்சரவை அமைச்சு செயலாளர்களின் சங்கம் ஒரு மில்லியன் ரூபாவையும், ஸ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர்கள் முன்னணி ஒரு மில்லியன் ரூபாவையும், இலங்கை கால்பந்து சம்மேளனம் 02 மில்லியன் ரூபாவையும், Bharti Airtel Lanka தனியார் நிறுவனம் 1.2மில்லியன் ரூபாவையும், Certis Lanka Security Solution தனியார் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், திரு. ரிச்சட் பெர்னாண்டோ ஒரு மில்லியன் ரூபாவையும், திரு. எஸ்.ஏ. சமரதுங்க ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். 

இன்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும். 

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.