Header Ads



சீனாவை அடக்க, அமெரிக்காவின் 18 அம்ச திட்டம்

உலகை ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோயை சீனா நினைத்திருந்தால், அந்த நாட்டுக்குள்ளேயே தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்று அமெரிக்கா ஆணித்தரமாக கூறுகிறது.

இந்த வைரசால் பிற நாடுகளை விட பெரும்பாதிப்புக்கு ஆளான அமெரிக்காவில், சீனாவுக்கு எதிரான மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் உண்மை தகவல்களை சீனா மறைத்து விட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. கொரோனா வைரஸ் தொற்று குறித்து சர்வதேச விசாரணை நடத்தி, சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும், அதில் சீனா ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டின்மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று கூறி அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் ஒரு மசோதா தாக்கலாகி உள்ளது.

அதன்மீதான விவாதத்தில் குடியரசு கட்சியின் முன்னணி எம்.பி. தாம் டில்லிஸ் பேசுகையில், சீனாவை பொறுப்பேற்க வைக்கும் விதத்தில் 18 அம்ச திட்டத்தை வெளியிட்டார். அது வருமாறு:-

* அமெரிக்க பொருளாதாரத்தை, பொதுசுகாதாரத்தை, தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் நேரத்தில், சீனாவுக்கு பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.

* பசிபிக் தடுப்பு முயற்சியை உருவாக்க வேண்டும். இதற்காக அமெரிக்க ராணுவத்துக்கு 20 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1½ லட்சம் கோடி) நிதி ஒதுக்க வேண்டும்.

* இந்தியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் ராணுவ உறவை வலுப்படுத்த வேண்டும், ராணுவ தளவாட விற்பனையை விரிவுபடுத்த வேண்டும்.

* ஜப்பான் ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்ய ஊக்குவிக்க வேண்டும். ஜப்பான், தென்கொரியாவுக்கு தாக்குதல் தளவாடங்களை விற்பனை செய்ய வேண்டும்.

* உற்பத்தி பிரிவுகளை திரும்பவும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும். மேலும் படிப்பாக வினியோகத்தில் சீனாவை சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

* அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடுவதில் இருந்து சீனாவை தடுத்து நிறுத்த வேண்டும்.

* நமது தொழில்நுட்ப நன்மைகளை மீண்டும் பெற ஏதுவாக அமெரிக்க நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும்.

* சீனா ‘ஹேக்கிங்’ (சட்ட விரோத ஊடுருவல்கள் செய்வது) செய்வதை தடுக்கிற வகையில் இணையதள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.

* சீனா தங்கள் கடன்களை அடைப்பதற்கு அமெரிக்கர்களின் வரிப்பணம் செல்வதை தடுக்க வேண்டும்.

* சீன தொழில் நுட்ப நிறுவனமான ஹூவாய்க்கு தடை விதிக்க வேண்டும். இத்தகைய தடைகளை பிற நட்பு நாடுகள் விதிக்க ஒருங்கிணைக்க வேண்டும்.

* கொடூரமான மனித உரிமை பதிவுகளுக்காக சீனா மீது தடை விதிக்க வேண்டும்.

* 2022-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இருந்து சீனாவை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு டிரம்ப் நிர்வாகம் முறைப்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

* அமெரிக்காவுக்குள் சீனாவின் பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

* சீன அரசால் நடத்தப்படுகிற ஊடகங்களை பிரசார பிரதிநிதிகளாக கருத வேண்டும்.

* கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைத்தது தொடர்பாக சீனா மீது விசாரணை நடத்த வேண்டும்.

* விசாரணை மற்றும் சீர்திருத்தம் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

* வளர்ந்து வரும் நாடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சீனாவின் கடன் வழங்கும் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

* சாத்தியமான தொற்றுநோய்கள் குறித்த உளவுத்தகவல்கள் பகிர்வை அதிகப்படுத்த வேண்டும். வெளிநாட்டு அரசுகள், அபாயகரமான வைரஸ்களை கையாள்வதை கண்காணிக்கிற வகையில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த 18 அம்ச திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

2 comments:

  1. American will never change their avenge attitude. They do not learn good lesson from Corona

    ReplyDelete
  2. Chine not less to US and US is not less to China in trying to controll the world and invading other countries and opressing minorities especially Muslims.

    Allah knows how to controll both of them..

    ReplyDelete

Powered by Blogger.