Header Ads



இலங்கையில் 148 ஆண்டுகளுக்கு பின் முட்டையிட்ட பறவை இனம்


வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பறவை இனம் ஒன்று புந்தல தேசிய வனப்பகுதியில் கடந்த 21 ஆம் திகதி குஞ்சிகளை பொறித்துள்ளன.

இந்த பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனப் பகுதியின் பொறுப்பாளர் அஜித் குணதுங்க தெரிவித்துள்ளார்.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுலாப் பறவை இனங்கள் தமது வாழ்விடங்களாக பயன்படுத்தும் புந்தல தேசிய வனப் பகுதிக்குள் ஜீப் வண்டிகள் செல்ல வேறு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வனப் பகுதி மூடப்பட்டுள்ளது. மீண்டும் வனப் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டாலும் சுற்றுலாப் பறவைகளின் பாதுகாப்பு கருதி ஜீப் வண்டிகள் செல்வதற்கான வழிகள் மூடப்படும் என அஜித் குணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சுற்றுலாப் பறவை இனம் 148 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் முட்டையிட்டு தனது குஞ்சிகளை பொறித்துள்ளமை சிறப்பம்சமாகும் என சுற்று சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

2

Glossy ibis எனப்படும் புலம்பெயர் பறவை 1870 ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது.

புந்தல தேசிய சரணாலயத்தில் இந்த பறவையை அதிகாரிகள் கண்காணித்துள்ளனர்.

அயல் நாடுகளில் இருந்து இலங்கைக்கு இந்த பறவை வருவதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

148 வருடங்களின் பின்னர் இந்த இன பறவை இலங்கையில் விருத்தி அடைகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புந்தல தேசிய சரணாலயத்தில் ஒரு பகுதியில் Glossy ibis பறவை 6 குஞ்சிகளுடன் இரண்டு கூடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த பறவையினம் இலங்கையில் விருத்தி அடைந்தமைக்கான சான்று பதிவாகியுள்ளது.


1872 ஆம் ஆண்டு திஸ்ஸமகாராமய பகுதியில் இந்த இனத்தைச் சேர்ந்த பறவை 8 கூடுகளை கட்டியிருந்ததாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.