Header Ads



கொரோனாவில் இருந்து குணமடைந்த 12 லட்சம் பேர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 12 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 36 லட்சத்து 64 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 22 லட்சத்து 5 ஆயிரத்து 723 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

மருத்துவ ஊழியர்கள்

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 6 ஆயிரத்து 13 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 1,88,068
ஸ்பெயின் - 1,51,633
இத்தாலி - 82,879
பிரான்ஸ் - 51,371
ஜெர்மனி - 1,35,100
ரஷியா - 19,865
துருக்கி - 68,166
பிரேசில் - 45,815
ஈரான் - 80,475
சீனா - 77,853
கனடா - 26,017
பெல்ஜியம் - 12,441
பெரு - 14,427
இந்தியா - 13,160
சுவிட்சர்லாந்து - 25,200
மெக்சிகோ - 15,938
அயர்லாந்து - 13,386
சிலி - 10,415
இஸ்ரேல் - 10,223
ஆஸ்திரியா - 13,462

No comments

Powered by Blogger.