Header Ads



கொவிட் நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு


விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் பணிக்குழாம் அன்பளிப்பு செய்த 2,205,448.89 ரூபா இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர தனது மே மாத சம்பளத் தொகையான 66000 ரூபாவை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அன்பளிப்பு செய்த 1,326,449.00 ரூபா சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. சட்ட சங்கத்தின் தலைவர் மேலதிக சொலிசிடர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன, சிரேஷ்ட மேலதிக சொலிசிடர் ஜெனரல் சரத் ஜயமான்ன, பிரதி சொலிசிடர் ஜெனரல் துசித் முதலிகே மற்றும் அரச சட்டத்தரணி இஷாரா ஜயரத்ன ஆகியோர் இதன் போது சமூகமளித்திருந்தனர். தம்புத்தேகம கமநல சங்கம் 200,000 ரூபாவை அன்பளிப்பு செய்ததுடன் இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அவர்களும் பிரசன்னமாகியிருந்தார். 

அரச பாடசாலைகளில் பற்சிகிச்சையாளர்கள் சங்கம் 500,000 ரூபாவையும், மிலாகிரிய புனித போல் கல்லூரி 225,000 ரூபாவையும் நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இலங்கை விமானப் படையின் முன்னாள் படையினர்கள் சங்கம் ஒரு லட்சம் ரூபாவையும், மேஜர் ஏ.யு. திஸ்ஸ அலுவிகார 10லட்சம் ரூபாவையும், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் - பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளை 5,042,242.56 ரூபாவையும், இலங்கை முதலீட்டுச் சபை 30லட்சம் ரூபாவையும், AIA Insurance PLC Ltd நிறுவனம் 700,000 ரூபாவையும், டீ.எம். பத்மசிறி 5000ரூபாவையும், ஈ.பீ.பி அபேசேக்கர 44864 ரூபாவையும், நேரடி வைப்பாகவும், 

ரஜீவ ஜயவீர 500000 ரூபாவையும், Nokia Oyj, Finlanda (€ 10,000) நிறுவனம் 1,992,900.00 ரூபாவையும், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் 5,000,000.00 ரூபாவையும், ஜேர்மனிக்கான புதிய தூதுவர் மனோரி பீ. உனம்புவ தனது ஒரு மாத சம்பளத் தொகையான 89,195.00 ரூபாவையும் Tianjin Rockcheck Puji Foundation, China 4,670,225.00 ரூபாவையும் இலங்கை செஸ் சம்மேளனம் ஓரு மில்லியன் ரூபாவையும் Jinasena Industrial Parks (Pvt) Ltd நிறுவனம் 1,305,736.25 ரூபாவையும் , China Merchant’s Charitable Foundation 37,490,337.50 ரூபாவையும் Mercantile Shipping Company PLC ஒரு லட்சம் ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர்.

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,128,027,502.02 ரூபாவாகும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.05.20

No comments

Powered by Blogger.