Header Ads



இலங்கையிடம் உதவி கோரிய WHO

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையிடம் உலக சுகாதார ஸ்தாபனம் உதவி கோரியுள்ளது.

கொவிட் - 19 எனப்படும் வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பங்களிப்பு செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டதாக தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் அசித டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்பினை இலங்கை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல நாடுகள் கொரோனாவிற்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

1 comment:

Powered by Blogger.