Header Ads



இறுதிச் சடங்கு குறித்து WHO இன் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள் - இலங்கைக்கு ஐ.நா. கோரிக்கை, முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சு குறித்தும் கவலை

- வீரகேசரி -

இறுதிசடங்குகள்  குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐநா முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட்சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மார்ச் 31 ம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள  வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது,மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப்பெட்டிக்குள்  வைக்கவேண்டும்,உடல்களை எரிக்கவேண்டும்,என தெரிவிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நான்காவது திருத்தங்கள், மார்ச் 31 ம் திகதி  2020 நீர்கொழும்பில் முஸ்லீம் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டவை என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவே அவரது உடல் எரியூட்டப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறைகளை மீள் பரிசீலனை செய்யவேண்டும், அதற்கேற்றபடி சுற்றுநிரூபத்தினை மாற்றவேண்டும்என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக அளவிலான தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, இலங்கையின் பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளிற்கு எதிரானதாக அமையக்கூடிய இலங்கையின் அரசாங்கம் தவிர்த்துக்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்,தங்கள் அன்புக்குரியவர்களிற்கு உரிய இறுதிச்சடங்கினை வழங்க முடியாது அல்லது புதைக்கமுடியாது என்ற அச்சம் காரணமாக அவர்கள் கொவிட் 19 குறித்து தகவல்களை வெளியிட தயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொடர்புபட்ட அனைத்து இன மத சமூகத்தவர்களுடனும் அனைத்து சுகாதார நிபுணர்களுடனும் தொடர்புபட்டவர்களுடனும் கலந்தாலோசனைகளை  மேற்கொண்டு புதிய விதிமுறைகளை தளர்த்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் விசேட அறிக்கையாளர் இலங்கை ஜனாதிபதிக்கு மேலும் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம்;; மாத்திரம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணங்களை தயவு செய்து தெரியப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானம் பாகுபாடற்றது,அவசியமானது ,உரிய நோக்கத்திற்கு சமாந்திரமானது என்பதை உறுதி செய்வதற்காக உரிய சுகாதார நிபுணர்கள் சிவில் சமூகத்தினர்,மற்றும் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசானைகள் இடம்பெற்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களா என்பதை தெரியப்படுத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடப்படுவதற்கு முன்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடல்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றார்களா? உடல் தகனம் செய்யப்படுவது குறித்து அவர்களிற்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படுகின்றதாஎன அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் பாரபட்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துங்கள் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

மதசுதந்திரத்திற்கான உரிமை இறுதி கிரியைகள் குறித்த நம்பிக்கைகள் மதிக்கப்படுகின்றதா பின்பற்றப்படுகின்றதா என்பதையும் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

முஸ்லீம்களிற்கும் இலங்கையின் ஏனைய  மத இன சிறுபான்மை மக்களிற்கு எதிரான குரோதப்பேச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் நோயாளிகளின் அடையாளங ;களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துங்கள்.

உங்களிடமிருந்து இது தொடர்பாக வெளியாகும் உங்களின் பதில்கள் 4 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக வெளியாகும் ,மனித உரிமை ஆணையாளருக்கான அறிக்கையில் அது சேர்க்கப்படும் என விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Over 182 countries followed burial system but only in Sri Lanka against the wishes of the Muslims.This matter has gone to UN and it make bad reputation in the world about Sri Lanka for treatment minorities.In India Supreme court in Mumbai has given permission to bury.

    ReplyDelete
  2. We pray to the Lord to succeed in this matter.

    ReplyDelete
  3. மாசா அல்லாஹ்

    ReplyDelete
  4. இதனால் இன்னும் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இதனை மிகவும் பெரிதாக கொண்டு செல்ல வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.