Header Ads



பிரசவத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லும் பொருட்களை உள்ளடக்கிய பொதி - UNFPA கையளிப்பு


ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியத்தின் (UNFPA) இலங்ககக்கான பிரதிநிதி திருமதி ரிட்சு நக்தகன், முன்மொழியப்பட்ட பிரசவத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லும் பொருட்களை உள்ளடக்கிய பொதிகளை இலங்கையின் பொது சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்கவிடம், டாக்டர் சித்திரமாலி  டீ சில்வா, பணிப்பாளர்,  குடும்ப சுகாதார பணியகம் (மன நல மற்றும் குழந்தை நல ஆரோக்கியம்) டாக்டர் மபிடிகம,  சமுதாய வைத்திய நிபுணர் மற்றும் டாக்டர் சுசி  பெரேரா, பொது சுகாதார வைத்திய நிபுணர் மற்றும் பணிப்பாளர் (நிறுவன அபிவிருத்தி), சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு  ஆகியோர் முன்னிலையில்  கையளித்தார். 

உலகளாவிய ரீதியில் அசசு்றுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா (COVID-19) நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கும் சமூகங்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்துகிறது. 

கடந்த மூன்று தசாப்தங்களாக, ஐக்கிய நாடுகள் சனத்தொகை  நிதியமானது (UNFPA)  அவசரகால நிலைமை மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. 

3.1 மில்லியன் இலங்கை ரூபா (அமெரிக்க டொலர் 36,000) பெறுமதியுள்ள  மகப்பபற்று பொதிகளை  அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையினால் (DFAT) நாடுகளுக்கு அவசர நிலைமையில் வினைத்திறனாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிப்பதற்காகவும் பிராந்தியத்திற்கான நிலைப்படுத்தல் முயற்சிக்காகவும் வழங்கப்படுகின்றது. 

ஒக்ஸ் பாம் இலங்கக (Oxfam Sri Lanka) இந்த மகப்பேற்று பொதி வழங்கலுக்கான பங்காளியாக திகழ்கின்றது. 

மகப்பேற்று பொதியானது சுகாதார மற்றும் சுத்திகரிப்பிற்கான பொருட்களை உள்ளடக்கியுள்ளதுடன், உள்ளூர் சமூகத்திலுள்ள  தாய்மாரக்ள், பெண்கள் மற்றும் இனவிருத்தி பராயத்திலுள்ள சிறுமிகளின் தேவைகளுக்கான வெளிப்பகடயாக வடிவமைக்கப்பட்ட பிற பொருட்களையும்  உள்ளடக்கியுள்ளது.

இந்த முயற்சியின் நோக்கம் ஒரு பெண்ணிற்கு அசௌகரியம், இயக்கம், உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் ஆகியவற்றில் மிகப் பெரிய தாக்கத்கத ஏற்படுத்தும் எளிய வசதிகளை வழங்குவதாகும். 

No comments

Powered by Blogger.